தேசிய செய்திகள்

மும்பையை யூனியன் பிரதேசமாக மாற்ற பாஜக சதி: சிவசேனா குற்றச்சாட்டு

மராட்டிய தலைநகர் மும்பையை யூனியன் பிரதேசமாக மாற்ற பாஜக சதித்திட்டம் தீட்டுவதாக சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது.

தினத்தந்தி

மும்பை,

மராட்டிய தலைநகர் மும்பையை யூனியன் பிரதேசமாக மாற்ற பாஜக சதித்திட்டம் தீட்டுவதாக சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் எம்.பியுமான சஞ்செய் ராவத் கூறியதாவது:

மும்பையை யூனியன் பிரதேசமாக மாற்றுவது தொடர்பாக சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. பாஜகவில் உள்ள சில குழுக்கள் இதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது. பாஜகவின் முன்னாள் எம்பி கிரிட் சோமையா மற்றும் சில கட்சித் தலைவர்கள், கட்டுமான தொழிலில் ஈடுபடுபவர்கள், தொழிலதிபர்கள் ஆகியோர் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் விவாதிக்க - -ப்பட்டுள்ளது.கடந்த இரண்டு மாதங்களாக இது நடந்து வருகிறது. மும்பையில் மராத்தி மக்களின் சதவீதம் வெகுவாகக் குறைந்துள்ளதாகவும், எனவே மத்திய அரசின் ஆட்சியின் கீழ் அந்த நகரத்தை யூனியன் பிரதேசமாக மாற்ற வேண்டும் என்றும் கூறி சோமையா தலைமையிலான குழு நீதிமன்றத்தை நாட வாய்ப்புள்ளது என்றார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை