தேசிய செய்திகள்

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாசின் பதவி காலம் மேலும் 3 ஆண்டுகள் நீட்டிப்பு

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாசின் பதவி காலம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

ரிசர்வ் வங்கியின் 25-வது கவர்னராக 2018 டிசம்பர் 11-ம் தேதி சக்திகாந்த தாஸ் பதவியேற்றார். உர்ஜித் பட்டேல் பதவி விலகியதை தொடர்ந்து சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டார். ரிசர்வ் வங்கி கவர்னரின் பதவி காலம் 3 ஆண்டுகள் ஆகும்.

அந்த வகையில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாசின் பதவி காலம் வரும் டிசம்பர் மாதம் 10-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதனை தொடர்ந்து வேறு யாரேனும் ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாசின் பதவி காலம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், சக்திகாந்த தாஸ் 2024 டிசம்பர் மாதம் வரை கவர்னர் பதவியில் இருப்பார்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை