தேசிய செய்திகள்

ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் அதிகரிப்பு - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவிகிதம் உயர்த்தி ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக்குழு 2 மாதங்களுக்கு ஒருமுறை கூடி, தன் கொள்கையை வகுக்கும். அந்தவகையில் ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு கொடுக்கும் குறுகிய கால கடனுக்கு விதிக்கும் வட்டி 'ரெப்போ ரேட்' என்று அழைக்கப்படுகிறது. கடந்த மே மாதம் 4-ந்தேதி கூடிய ரிசர்வ் வங்கியின் 6 பேர் கொண்ட நிதி கொள்கைக்குழு, 4 சதவிகிதமாக இருந்த 'ரெப்போ ரேட்' விகிதத்தை 40 புள்ளிகள் (0.4 சதவிகிதம்) உயர்த்தி வட்டி விகிதத்தை 4.40 சதவிகிதமாக உயர்த்தியது.

இதனை தொடர்ந்து ஜூன் 8-ம் தேதி மீண்டும் கூடிய இந்தக்குழு, ரெப்போ ரேட் வட்டியை மேலும் 0.50 சதவிகிதம் உயர்த்தியது. இதன் மூலம் ரெப்போ வட்டி விகிதம் 4.9 சதவிகிதமாக நிலவி வந்தது.

இந்நிலையில், ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி இன்று மேலும் உயர்த்தியுள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரெப்போ வட்டி விகிதம் மேலும் 0.5 சதவிகிதம் உயர்த்தப்பட்டுவதாக அறிவித்தார். இதன் மூலம் ரெப்போ வட்டி விகிதம் 5.40 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

ரெப்போ வட்டி விகிதம் 5.40 ஆக அதிகரித்துள்ளதால் வீட்டுக்கடன், வாகன கடன், தனி நபர் கடன் வாங்குபவர்களுக்கும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தங்கள் தேவைக்காக கடன் வாங்கும்போது இனி கூடுதலாக வட்டி கட்ட வேண்டும். ஏற்கனவே கடன் வாங்கியவர்கள் சுழற்சி விகிதத்தில் கடன் வாங்கியிருந்தால் இனி மாத தவணை கட்டணம் உயரும் அல்லது தவணை ஆண்டுகள் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்