தேசிய செய்திகள்

ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை; 6 சதவீதம் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு

இந்திய ரிசர்வ் வங்கியானது நடப்பு நிதி ஆண்டிற்கான (2018-19) ரெப்போ விகிதம் மாற்றமின்றி 6 சதவீதம் ஆக இருக்கும் என அறிவித்துள்ளது. #RBI

புதுடெல்லி,

இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் பட்டேல் தலைமையிலான நிதிக்கொள்கை குழுவானது ரெப்போ ரேட் எனப்படும் குறுகிய கால கடன் வழங்கும் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமின்றி 6 சதவீதம் ஆக இருக்கும் என அறிவித்துள்ளது. இந்த முடிவுக்கு ஆதரவாக இந்திய ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குநர் மைக்கேல் பத்ரா தவிர ஆறில் 5 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்து உள்ளனர்.

இதேபோன்று ரிவர்ஸ் ரெப்போ விகிதமும் மாற்றமின்றி 5.75 சதவீதம் ஆக அறிவிக்கப்பட்டு உள்ளது. ரொக்க கையிருப்பு விகிதம் மற்றும் எஸ்.எல்.ஆர். ஆகியவை முறையே 4 சதவீதம் மற்றும் 19.5 சதவீதம் ஆக உள்ளது.

இதேபோன்று நுகர்வோர் விலை குறியீடை அடிப்படையாக கொண்ட பணவீக்கம், கடந்த மார்ச்சில் இருந்த 5.1 சதவீதம் என்ற அளவை விட பிப்ரவரியில் 4.4 சதவீதம் என்ற அளவில் குறைந்து இருந்தது.

SCROLL FOR NEXT