தேசிய செய்திகள்

இயல்பான பேச்சுவார்த்தைக்கு முயற்சி: பிரதமர் மோடி தமிழில் டுவிட்

வேளாண் அமைச்சர் விவசாயிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தை படிக்க வேண்டும் என்று தமிழில் பிரதமர் மோடி டுவிட் செய்துள்ளார்.

புதுடெல்லி,

சீர்திருத்தம் என்ற பெயரில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் தங்களுக்கு எதிரானவை என கருதி அவற்றை திரும்பப்பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், வேளாண் அமைச்சர் விவசாயிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தைம் விவசாயிகள் படிக்க வேண்டும் என பிரதமர் மோடி தமிழில் டுவிட் செய்துள்ளார். பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட் பதிவில், வேளாண் துறை அமைச்சர் தனது உணர்வுகளை வேளாண் சகோதர சகோதரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

இயல்பான பேச்சுவார்த்தைக்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. உழவர் பெருமக்கள் அதைப் படிக்க வேண்டுகிறேன். இந்தத் தகவலை பெருமளவில் பகிர வேண்டும் என பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை