கவுகாத்தி,
அசாம் மாநில முன்னாள் முதல்-மந்திரி தருண் கோகாய் நேற்று கவுகாத்தியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு பொதுமக்கள் ஆதரவு இருப்பதாக பா.ஜனதா உண்மையிலேயே நம்பினால், அந்த சட்டம் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த தயாரா? 2021-ம் ஆண்டு அசாம் சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளில் 100 தொகுதிகளை கைப்பற்றப் போவதாக மாநில பா.ஜனதா தலைவர் கூறுகிறார். ஆனால், அது நடக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
அசாம் மாநில காங்கிரசுக்கான மேலிட பொறுப்பாளர் ஹரீஷ் ரவத், மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், குடியுரிமை சட்டம் ரத்து செய்யப்படும் என்று கூறினார்.