தேசிய செய்திகள்

இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார் - தம்பிதுரை

இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார் என்று துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.

புதுடெல்லி,

டெல்லியில், டெல்லி தமிழ் கல்விக்கழகம் சார்பில் 7 இடங்களில் பள்ளிக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. 8-வது பள்ளிக்கூடம் கட்ட மயூர்விகார் 3 பகுதியில் மத்திய அரசு 2 ஏக்கர் இடம் ஒதுக்கியது. இங்கு தமிழக அரசு சார்பில் புரட்சித் தலைவி அம்மா என்ற பெயரில் தனி கட்டிடம் கட்டுவதற்கு ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

இந்த கட்டிடத்துக்கான கல்வெட்டு திறப்புவிழா நேற்று நடந்தது. சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் கல்வெட்டை திறந்து வைத்தார்.

டெல்லியில் நடைபெற்ற விழாவில் நாடாளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழா முடிந்த பின்னர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறும்போது, 18 பேரும் மீண்டும் அ.தி.மு.க.வுக்கு வருவதாக இருந்தால் அவர்களை ஏற்றுக்கொள்வது பற்றி தலைமைக்கழகம் முடிவு எடுக்கும். இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அதை சந்திக்க அ.தி.மு.க. தயாராக இருக்கிறது. ஏற்கனவே 19 தொகுதிகளிலும் அ.தி.மு.க.தான் வெற்றி பெற்று இருந்தது. இனியும் வெற்றி பெறும். திருவாரூர் தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்றார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்