தேசிய செய்திகள்

வீடு புகுந்து ரியல் எஸ்டேட் அதிபர் கொலை

பெங்களூருவில் வீடு புகுந்து ரியல் எஸ்டேட் அதிபர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

பெங்களூரு:

பெலகாவி கேம்ப் பகுதியில் வசித்து வந்தவர் சுதீர் காம்ளே (வயது 47). இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, 3 பிள்ளைகள் உள்ளனர். துபாயில் வேலை செய்து வந்த சுதீர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெலகாவிக்கு வந்தார். பின்னர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் ஒரு அறையில் சுதீர் தனியாக தூங்கினார். இன்னொரு அறையில் மனைவி, பிள்ளைகள் தூங்கி கொண்டு இருந்தனர்.

இந்த நிலையில் சுதீரின் அறைக்குள் புகுந்த மர்மநபர்கள் சுதீரை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி சென்று விட்டனர். சுதீரை கொலை செய்தது யார்? என்ன காரணத்திற்காக கொலை நடந்தது? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது