தேசிய செய்திகள்

சத்தீஸ்கர் காவல்துறையில் 13 திருநங்கைகள் ஏட்டுகளாக சேர்ப்பு

சத்தீஸ்கரில் காவல்துறையில் முதல் முறையாக 13 திருநங்கைகள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

தினத்தந்தி

ராய்ப்பூர்,

சத்தீஸ்கர் மாநிலத்தில் காவல்துறையில் முதல் முறையாக 13 திருநங்கைகள், ஏட்டுகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். தகுதி அடிப்படையில் வழக்கமான தேர்வுமுறைகளில் தேர்ச்சி பெற்று அவர்கள் காவலர்களாக தேர்வாகி இருக்கிறார்கள். இன்னும் 2 பேர் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர்.

தேர்வான 13 பேரில், 8 பேர் ராய்ப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நான் காவலர் ஆவேன் என்று கனவிலும் நினைத்தது கிடையாது. பல்வேறு சவால்களை எதிர்கொண்டபோதிலும் நாங்கள் இதை சாதித்துள்ளோம் என்று பூரிப்புடன் 24 வயதான சிவன்யா தெரிவித்தார்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை