கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

டெல்லி செங்கோட்டை முற்றுகை வழக்கு: நடிகர் தீப் சித்துக்கு 14 நாள் நீதிமன்ற காவல் - டெல்லி கோர்ட் உத்தரவு

டெல்லி செங்கோட்டை முற்றுகை வழக்கில், நடிகர் தீப் சித்துக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதித்து டெல்லி கோர்ட் உத்தரவிட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி,

வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. செங்கோட்டை மீது ஏறிய ஒரு கும்பல், அங்கு மத கொடிகளை ஏற்றியது. போலீசாரை தாக்கியது.

இதில், நூற்றுக்கணக்கான போலீசார் காயமடைந்தனர். இந்த வன்முறையை தூண்டி விட்டதாக நடிகர் தீப் சித்து கைது செய்யப்பட்டார். அவரை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க டெல்லி மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. அவரது போலீஸ் காவல் முடிவடைந்ததால், நேற்று அதே கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து நடிகர் தீப் சித்துவை 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் சமர்ஜீத் கவுர் உத்தரவிட்டார். முன்னதாக தீப் சித்து மீது வன்முறை, கொலைக்கு முயற்சி செய்தல், கிரிமினல் சதி உள்பட பல பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்