ஸ்ரீகாளஹஸ்தி,
போலீசார் விரைந்து சென்று 14 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். கைதானவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். கைதானவர்களிடம் இருந்து 12 செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும்.
அதேபோல் பாக்ராப்பேட்டை வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டிக் கடத்த முயன்றதாக கூறி சென்னையைச் சேர்ந்த ரவி, காஞ்சீபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா மற்றும் சேலம், தூத்துக்குடி, தர்மபுரி, விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என 32 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செம்மரம் மற்றும் லாரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.