தேசிய செய்திகள்

2011-ம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் வார்டுகள் மறுவரையறை-பெங்களூரு மாநகராட்சி தகவல்

2011-ம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் வார்டுகள் மறுவரையறுக்கப்பட்டு உள்ளதாக பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் தகவல் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- நாங்கள் தயாரித்த வார்டு மறுவரையறை அறிக்கையை அரசு அரசாணையில் பிறப்பித்துள்ளது. வார்டுகளின் எண்ணிக்கை 243 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆட்சேபனைகள் தெரிவிக்க 15 நாட்கள் காலஅவகாசம் வழங்கியுள்ளோம். கடந்த 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டுள்ளன.

ஒரு சில வார்டுகளின் பகுதிகள் பக்கத்து சட்டசபை தொகுதி எல்லைக்குள் உள்ள வார்டில் சேர்ந்துள்ளன. ஆட்சேபனை தெரிவிக்க விண்ணப்பங்களை மாநகராட்சியின் இணையதள பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நேரில் வந்து ஆட்சேபனைகளை தெரிவிக்க வேண்டியது இல்லை. இணைய முகவரிக்கு ஆன்லைனில் அனுப்பி வைக்கலாம். நகர வளர்ச்சித்துறையின் கூடுதல் தலைமை செயலாளர், விகாச சவுதா முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆட்சேபனை யாருக்கு அனுப்ப வேண்டும் என்பதை மாநகராட்சி முடிவு செய்வது இல்லை. இதை மாநில அரசு தான் முடிவு செய்கிறது. மாநகராட்சி தேர்தல் நடத்துவது குறித்து மாநில தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்கிறது. அதற்கும், மாநகராட்சிக்கும் சம்பந்தம் கிடையாது.

இவ்வாறு துஷார் கிரிநாத் கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்