தேசிய செய்திகள்

கொரோனா நோயாளிகளின் உடலில் தொற்று காலத்தை குறைத்தால் புதிய பாதிப்புகளை தவிர்க்கலாம் - ஆய்வில் கண்டுபிடிப்பு

கொரோனா நோயாளிகளின் உடலில் தொற்று பாதிப்பு காலத்தை அரை நாள் குறைத்தால் கூட பல லட்சம் புதிய பாதிப்புகளை தவிர்க்கலாம் என்று அமெரிக்க ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

புதுடெல்லி,

அமெரிக்காவில் உள்ள பொது சுகாதார கல்வி நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் ஒரு ஆய்வில் ஈடுபட்டனர். கொரோனா நோயாளிகளின் உடலில் தொற்று பாதிப்பு காலத்தை குறைத்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று ஆய்வில் ஈடுபட்டனர்.

இதற்கென ஒரு கணக்கீட்டு முறையை உருவாக்கினர். அதன்படி, கொரோனா நோயாளிகளில் நான்கில் ஒரு பங்கு பேருக்கு சிகிச்சை அளித்து, அவர்களின் உடலில் தொற்று காலத்தை அரை நாள் குறைத்தால் கூட 14 லட்சம் புதிய பாதிப்புகளையும், 99 ஆயிரம் பேர் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்படுவதையும் தவிர்க்கலாம் என்று கணக்கிட்டனர்.

தொற்று காலத்தை 3 நாள் குறைத்தால், 74 லட்சம் புதிய பாதிப்புகளை தவிர்க்கலாம். நான்கில் 3 பங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தால், சுமார் 3 கோடி புதிய பாதிப்புகளை தவிர்க்கலாம். 85 ஆயிரத்து 600 கோடி டாலர் மருத்துவ செலவுகளை மிச்சப்படுத்த முடியும் என்றும் கணக்கிட்டுள்ளனர்.

இந்த கண்டுபிடிப்பு, தொற்று காலத்தை குறைக்கக்கூடிய தடுப்பூசிகளை உருவாக்க உதவும் என்று ஆராய்ச்சியில் ஈடுபட்ட புரூஸ்லி தெரிவித்தார். கொரோனாவை தடுக்க முடியாத, குணப்படுத்த முடியாத தடுப்பூசியாக இருந்தாலும், தொற்று காலத்தை குறைக்கும் என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...