தேசிய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியின் 2-வது டோஸ் போடும் இடைவெளியை குறைப்பது பற்றி ஆலோசனை - மத்திய அரசு

கொரோனாவின் வீரியத்தை குறைக்கவே தடுப்பூசி போடப்படுகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் குறைந்து வரும் நிலையில், மராட்டியம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மட்டும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இந்தநிலையில் கொரோனா தடுப்பூசி தொற்றை தடுப்பதற்கானது அல்ல என்றும் தொற்றின் வீரியத்தை குறைக்கிறது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது, உயிரிழப்பை 98.99% தடுப்பதில் தடுப்பூசி பலனளிப்பதாகவும் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத இடங்களில் பாதிப்பு அதிகரிப்பதை காண முடிகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் எனவும் கோவிஷீல்டு தடுப்பூசியின் 2-வது டோஸ் போடும் இடைவெளியை குறைப்பது பற்றி அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.