தேசிய செய்திகள்

‘செல்வ மகள்’ உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி குறைப்பு

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம், காலாண்டுக்கு ஒருதடவை மாற்றி அமைக்கப்படுகிறது. அதன்படி, வருகிற ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டுக்கான வட்டி விகிதத்தை மத்திய நிதி அமைச்சகம் நேற்று அறிவித்தது.

தினத்தந்தி

புதுடெல்லி,

தேசிய சிறு சேமிப்பு திட்டம், பொது வைப்பு நிதி ஆகியவற்றுக்கான வட்டி, 0.2 சதவீதம் குறைக்கப்பட்டு, 7.6 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிசான் விகாஸ் பத்திரத்துக்கான வட்டி விகிதமும் 0.2 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் திட்டத்தின் வட்டி, 8.3 சதவீதத்தில் இருந்து 8.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

5 ஆண்டுகால டெபாசிட்டுக்கான வட்டி, 6.9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டுகால சேமிப்பு திட்ட வட்டி 8.3 சதவீதமாகவும், சேமிப்பு கணக்குக்கான ஆண்டு வட்டி 4 சதவீதமாகவும் நீடிக்கிறது.

இந்த வட்டி குறைப்பு அடிப்படையில், வங்கிகளும் டெபாசிட் மீதான வட்டியை குறைக்கும் என்று கருதப்படுகிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்