தேசிய செய்திகள்

இடஒதுக்கீடு குறித்து கேள்வி எழுப்பியவரிடம் ஆவேசமடைந்த சந்திரசேகர் ராவ் - தெலுங்கானாவில் பரபரப்பு

தெலுங்கானாவில் இடஒதுக்கீடு குறித்து கேள்வி எழுப்பியவரிடம் சந்திரசேகர் ராவ் ஆவேசமடைந்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தினத்தந்தி

ஐதராபாத்,

தெலுங்கானாவில் முஸ்லிம்களுக்கு 12 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்ட இந்த தீர்மானம் மீது இதுவரை எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் தெலுங்கானாவின் ஆசிபாபாத் மாவட்டத்தில் மாநில முதல்-மந்திரியும், தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவருமான சந்திரசேகர் ராவ் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவரிடம், இந்த இடஒதுக்கீடு குறித்த பரிந்துரையின் தற்போதைய நிலை என்ன? என்று ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இது சந்திரசேகர் ராவுக்கு மிகுந்த ஆத்திரத்தை அளித்தது. உடனே அவர் அந்த நபரிடம் கோபமடைந்தார். என்ன பேசுகிறாய்? அமைதியாக இரு. எந்த 12 சதவீதம்? ஏன் அவசரப்படுகிறாய்? நான் உன் தந்தையிடம் சொல்வேன் என்று ஆவேசமாக பதிலளித்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சந்திரசேகர் ராவுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளன.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை