தேசிய செய்திகள்

வட்டார வளர்ச்சி கவுன்சில் தலைவர் தேர்தல்: காஷ்மீரில் முதல் முறையாக 24-ந் தேதி நடைபெறுகிறது

காஷ்மீரில் வட்டார வளர்ச்சி கவுன்சில் தலைவர் தேர்தல் முதல் முறையாக 24-ந் தேதி நடைபெற உள்ளது.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 316 வட்டாரங்களில் வட்டார வளர்ச்சி கவுன்சில் தலைவர் தேர்தல் முதல்முறையாக நடைபெறுகிறது. அக்டோபர் மாதம் 24-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, அன்றே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி சைலேந்திர குமார் கூறினார்.

8,313 பெண் வாக்காளர்கள் உள்பட மொத்தம் 26,629 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2 பேர் மட்டும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வாக்களிக்க விரும்பினால் உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்