தேசிய செய்திகள்

2024-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த மாநில கட்சிகள் இணைந்து தேசிய முன்னணி அமைக்க வேண்டும்; அகாலிதளம் அழைப்பு

பஞ்சாப் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடக்கிறது. அதையொட்டி, அம்மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான அகாலிதளத்தின் தலைவர் சுக்பிர்சிங் பாதல் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மாநில கட்சிகள்தான் மக்களின் பிரச்சினைகளை நன்றாக புரிந்துகொண்டவை. அதனால், மாநில கட்சிகள் ஒன்று சேருவது அவசியம். இதுதொடர்பாக பல்வேறு மாநில கட்சிகளுடன் பேசி வருகிறேன். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக மாநில கட்சிகள் இணைந்து தேசிய முன்னணி ஒன்றை அமைக்க வேண்டும். இந்த அணி, வலிமையான அணியாக உருவெடுக்கும் என்று நம்புகிறேன். முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் இப்போது நாடுதழுவிய கட்சியாக இல்லை. அதனால், இந்த அணிதான் பா.ஜனதாவுக்கு எதிரான 2-வது அணியாக இருக்கும். பா.ஜனதாவுடனான எங்களது பல வருட கூட்டணி நிரந்தரமாக முடிந்து விட்டது. என்ன நடந்தாலும், பஞ்சாபில் வேளாண் சட்டங்களை அமல்படுத்த விட மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...