தேசிய செய்திகள்

கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு; ஜம்முவில் சுற்றுலா துறைக்கு புத்துயிரூட்ட நடவடிக்கை

கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஜம்முவில் சுற்றுலா துறைக்கு புத்துயிரூட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஜம்மு,

ஜம்முவின் ஷாங்பால் பகுதியில் 3 நாள் மலையேற்ற நிகழ்வை ஜம்மு சுற்றுலாத் துறை இயக்குனர் விவேகானந்த ராய் நேற்று முன்தினம் தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜம்முவில் கொரோனா சூழலால் சுற்றுலா தொடர்பான செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. நாங்களும், சுற்றுலாத் துறைக்கு புத்துயிரூட்டும் நடவடிக்கைகளுக்குத் திட்டமிட்டுள்ளோம்.

2 நாள் மழைத் திருவிழாவும், மோட்டார் சைக்கிள் பயணமும் நடத்தப்பட்டிருக்கின்றன. நவராத்திரி, கிறிஸ்துமஸ், குளிர்கால திருவிழாவையொட்டி சுற்றுலா பயணிகளுக்காக ஜம்முவில் பெரிய நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடப்பட்டிருக்கிறது.

ஜம்முவுக்கு விமான நிலையம், ரெயில், பஸ் நிலையங்களில் வந்திறங்கும் சுற்றுலாப் பயணிகளை சுற்றுலாத் துறை சார்பில் வரவேற்கவும் ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு