தேசிய செய்திகள்

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மாதம் 13-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வு 3 ஆயிரத்து 862 மையங்களில் நடத்தப்பட்டது. 15 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில், சுமார் 13 லட்சத்து 52 ஆயிரம் பேர் மட்டுமே தேர்வை எழுதியிருந்தனர்.

தமிழகத்தில் ஒரு லட்சத்து 17 ஆயிரம் பேர் நீட் தேர்வை எழுதினர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மாணவர்கள் மற்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்த மாணவர்களுக்கு நேற்றுமுன்தினம் மறுதேர்வு நடத்தப்பட்டது.

இந்த நிலையில், நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வுகள் முகமை இன்று வெளியிட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு முடிவுகளை nta.ac.in மற்றும் ntaneet.nic.in ஆகிய இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்