தேசிய செய்திகள்

தேசத்திற்காக முத்துராமலிங்க தேவர் ஆற்றிய தலைசிறந்த பங்களிப்பை நினைவு கூர்கிறேன் - பிரதமர் மோடி

முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி விழாவையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் புகழாரம் சூட்டியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா, 60-வது குருபூஜை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட்டு வருகிறது. தேவர் குருபூஜை விழாவையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் அவரது உருவ படத்திற்கு மரியாதை செலுத்தி வருக்கின்றனர்.

இந்த நிலையில், முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி விழாவையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் புகழாரம் சூட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

"பெருமதிப்பிற்குரிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகிறேன். சமூக மேம்பாடு,விவசாயிகள் நலன்,வறுமை ஒழிப்பு என தேசத்திற்காக அவர் ஆற்றிய தலைசிறந்த பங்களிப்பை நினைவு கூர்கிறேன்!" என்று பதிவிட்டுள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்