தேசிய செய்திகள்

இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பங்களிப்பை நினைவுகூர்வோம் : பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பங்களிப்பை நினைவுகூர்வோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்கு இன்று பிறந்த தினமாகும். ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினம் குழந்தைகள் தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

நேருவின் 129- வது பிறந்த நாளையொட்டி, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட் பதிவில் கூறியிருப்பதாவது:- நமது முதல் பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான இன்று அவரை நினைவு கூர்வோம். சுதந்திர போராட்டம் மற்றும் பிரதமராக பதவி வகித்த போது அவர் ஆற்றிய பங்களிப்பை நாம் நினைவு கூர்வோம் இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், நமது முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான இன்று அவரை நினைவு கூர்வோம் என்று தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்