தேசிய செய்திகள்

திருப்பதியில் ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதை மீண்டும் திறப்பு - பக்தர்கள் மகிழ்ச்சி

திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதை பக்தர்கள் பயன்பாட்டுக்காக மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.

திருமலை,

திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்ல, அலிபிரி நடைபாதை மற்றும் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை ஆகிய 2 மலை பாதைகள் உள்ளன. இதில், ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை, கடந்த நவம்பர் மாதம் கனமழையால் முழுவதும் சேதமடைந்தது. இதனால், இந்த மலைப்பாதை வழியாக பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, 3 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பில் ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதையில் மராமத்து பணிகளை தேவஸ்தானம் மேற்கொண்டது.

இந்த நிலையில், தற்போது பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதையை அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி நேற்று திறந்து வைத்தார். மேலும் திருமலைக்கு நடைபயணமாக சென்ற பக்தர்களை அவர் கொடியசைத்து அனுப்பினார். மீண்டும் மலைப்பாதை திறக்கப்பட்டதால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...