கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுங்கள்: மத்திய அரசிடம் மாயாவதி வலியுறுத்தல்

பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்ததுபோல், 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுங்கள் என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

லக்னோ,

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

பா.ஜனதா, அனைவருடன் இணைந்து வளர்ச்சி காண்போம் என்று அடிக்கடி சொல்கிறது. ஆனால், விவசாயிகள் நீண்ட காலமாக வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களின் நம்பிக்கையை அரசால் பெற முடியவில்லை.

அப்படியானால், பா.ஜனதாவின் கோஷத்தை மக்கள் எப்படி நம்புவார்கள்? பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்ததுபோல், தீபாவளி பரிசாக, 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்து விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்