தேசிய செய்திகள்

குழந்தை திருமணங்களை பற்றி தகவல் தெரிவிப்பது கட்டாயம் - மசோதா கொண்டுவர மத்திய அரசு பரிசீலனை

குழந்தை திருமணங்களை பற்றி தகவல் தெரிவிப்பதை கட்டாயம் ஆக்கும் மசோதா கொண்டுவர மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.

தினத்தந்தி

புதுடெல்லி,

சட்டபூர்வ திருமண வயது, பெண்களுக்கு 18 ஆகவும், ஆண்களுக்கு 21 ஆகவும் உள்ளது. ஆனால், 18 வயதுக்கு கீழ் உள்ள பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடப்பதும், அவர்கள் 18 வயதுக்குள்ளேயே குழந்தை பெறுவதும் அதிகரித்து வருகிறது.

இதை கருத்திற்கொண்டு, குழந்தை திருமண தடுப்பு சட்டத்தை வலுப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி கூறியதாவது:-

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தெரிவிப்பது கட்டாயம் என்று போக்சோ சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அதுபோல், குழந்தை திருமணங்கள் குறித்தும் தகவல் தெரிவிப்பதை கட்டாயம் ஆக்க குழந்தை திருமண தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்து மசோதா கொண்டு வருவது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி