தேசிய செய்திகள்

வங்காளதேசத்தில் சிறுபான்மையினர் தாக்கப்படுவது கவலை அளிக்கிறது - ஓவைசி

சிறுபான்மையினரின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாக்கும் பொறுப்பு வங்காள தேச அரசுக்கு உண்டு என்று ஓவைசி கூறியுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

வங்காளதேசத்தில் போராட்டங்கள் வன்முறையாக மாறியதையடுத்து, பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா ராஜினாமா செய்து நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.

வங்காளதேசத்தில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர் போராட்ட அமைப்புகள்,நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணா முகமது யூனுஸ் தலைமை ஏற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. இதனையடுத்து இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் பதவியேற்றுக்கொண்டார்.

இந்தநிலையில், வங்காளதேசத்தில் மாணவர் அமைப்புகள் நடத்தி வரும் போராட்டம் மற்றும் வன்முறை நீடித்து வருகிறது. அங்கு சிறுபான்மையினராக வசிக்கும் இந்துக்களும் இந்த வன்முறைக்கு ஆளாகி உள்ளனர். அங்குள்ள இந்து கோவில்கள், இந்துக்களின் வீடுகள், வணிக நிறுவனங்கள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன.

இது குறித்து மஜ்லிஸ் கடசித்தலைவரும், எம்.பி.யுமான ஓவைசியும் இந்த தாக்குதல்களுக்கு கவலை தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், வங்காளதேசத்தில் சிறுபான்மையினர் தாக்குதலுக்கு ஆளாகி வருவது கவலையளிக்கிறது. சர்வதேச சட்டப்படி சிறுபான்மையினரின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாக்கும் பொறுப்பு வங்காளதேச அரசு மற்றும் அதிகாரிகளுக்கு உள்ளது என குறிப்பிட்டு உள்ளார்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை