புதுடெல்லி,
இந்திய அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த நாளான 1950- ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. குடியரசு தினத்தில் டெல்லி செங்கோட்டையில் ஜனாதிபதி கொடியேற்றி முப்படைகளின் அணிவகுப்பை பார்வையிடுவார்.
ஆண்டு தோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் குடியரசு தின கொண்டாட்டங்கள் ஜனவரி 24 ஆம் தேதியே தொடங்கிவிடும். இந்த ஆண்டு முதல் புதிய மாற்றத்தை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது. அதாவது குடியரசு தின விழாவுடன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளையும் மத்திய அரசு இணைத்துள்ளது.
அதன்படி ஜனவரி 23ம் தேதி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் கொண்டாட்டத்துடன் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் தொடங்கும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக நேதாஜி பிறந்த நாள் 'வலிமை தினமாக' (பரக்ரம் திவாஸ்) மத்திய அரசு அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்.