புதுடெல்லி,
டெல்லியில் உள்ள பா.ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், பா.ஜனதா தேசிய தலைவராக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜே.பி.நட்டா கலந்துகொண்டு தேசிய கொடி ஏற்றினார். இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அப்போது, தேசத்தின் சேவை, முன்னேற்றம் மற்றும் பெருமை ஆகியவற்றுக்கு நமது பங்களிப்பை உறுதி செய்வோம் என ஜே.பி.நட்டா தலைமையில் கட்சி நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.