தேசிய செய்திகள்

தொழில் நுட்ப கோளாறு: உத்தரகாண்ட் சுரங்க மீட்பு பணிகள் மீண்டும் நிறுத்தம்

சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க வெறும் 10-12 மீட்டர்கள் மட்டுமே டிரில்லிங் செய்ய வேண்டியுள்ளது என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தினத்தந்தி

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலம் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா - பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டு வரும் சுரங்கப் பாதையில் கடந்த 12-ம் தேதி மண் சரிந்து விழுந்தது. இதன் காரணமாக சுரங்கப் பாதைக்குள் 41 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். அவர்களை மீட்கும் பணிகள் கடந்த 12 நாட்களாக பல சிக்கல்களுக்கு நடுவில் மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது. பல்வேறு தடைகளால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க வெறும் 10-12 மீட்டர்கள் மட்டுமே டிரில்லிங் செய்ய வேண்டியுள்ளது என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எல்லாம் சரியாக சென்றால் மேலும் இரண்டு பைப்களை உள்ளே செலுத்தி தொழிலாளர்களை மீட்டு விட முடியும். எனினும், இதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்பதை கூற முடியாது. ஏனெனில், எதிர்பாராத இடையூறுகள் ஏற்படுவதால் பணிகளில் தாமதம் ஏற்படுகிறது" என்றார். மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வந்த நிலையில், தொழில் நுட்ப கோளாறு காரணமாக மீட்பு பணிகள் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்