தேசிய செய்திகள்

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீட்டுக்கு காங்கிரஸ் ஆதரவு

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீட்டுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது.

தினத்தந்தி

புதுடெல்லி,

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை வரவேற்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் தோற்று விடுவோம் என்ற பயத்தில் பா.ஜனதா இந்த முடிவை எடுத்துள்ளது. வேலைவாய்ப்பே இல்லாதநிலையில், வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு என்று கூறுவது தேர்தல் ஏமாற்று வேலை. இருப்பினும், மசோதாவை நாங்கள் ஆதரிக்கிறோம். இடஒதுக்கீடு பெறாத பிரிவினரில் ஏழைகள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை காங்கிரஸ் ஆதரிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது