தேசிய செய்திகள்

மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு: மத்திய அரசின் முடிவுக்கு அமித்ஷா வரவேற்பு

மருத்துவப்படிப்பில், அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு இந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதமும், பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு 10 சதவீதமும் இட ஒதுக்கீட்டை இந்த கல்வி ஆண்டு முதலே அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அரசின் இந்த நடவடிக்கையை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வரவேற்றுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் அனைத்திந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீதமும், பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு 10 சதவீதமும் இந்த ஆண்டே இடஒதுக்கீடு வழங்கும் வரலாற்று சிறப்பு மிக்க முடிவை எடுத்ததற்காக பிரதமர் மோடியை பாராட்டுகிறேன் என்று குறிப்பிட்டு உள்ளார்.

இந்த நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றியிருப்பதன் மூலம் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களின் நலன்கள் மீதான மத்திய அரசின் உறுதிப்பாட்டை பிரதமர் வெளிப்படுத்தி இருப்பதாகவும் அவர் புகழாரம் சூட்டியிருந்தார்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை