தேசிய செய்திகள்

விவசாய கடன் ரத்துக்கு ரிசர்வ் வங்கி கவர்னர் எதிர்ப்பு

விவசாய கடன் ரத்து செய்யும் அரசின் முடிவுக்கு, ரிசர்வ் வங்கி கவர்னர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

சமீபத்தில் 3 மாநிலங்களில் புதிதாக அமைந்த காங்கிரஸ் அரசுகள், விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளன. இதுகுறித்து கேட்டபோது, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது:-

நிதி விவகாரத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் எந்த முடிவையும் எடுக்க அரசியல் சட்டரீதியாக உரிமை உண்டு. ஆனால், விவசாய கடன் தள்ளுபடி முடிவை எடுப்பதற்கு முன்பு, தங்களது நிதி நிலவரத்தை கவனமாக ஆய்வு செய்ய வேண்டும்.

கடன் தள்ளுபடிக்கு தேவையான பணத்தை வங்கிகளுக்கு அளிக்க முடியுமா? அந்த அளவுக்கு பணம் உள்ளதா? என்று பரிசீலிக்க வேண்டும். அதை விடுத்து, ஒட்டுமொத்தமாக விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது, கடன் கலாசாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். கடன் வாங்குபவர்களின் நடத்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.