தேசிய செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது கூட்டம் சேர்வதை கட்டுப்படுத்த வேண்டும் - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்

புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது கூட்டம் சேர்வதை கட்டுப்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பி உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இதன்படி மாநில அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 15ம் தேதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கவும், தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.

மேலும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது கூட்டம் சேர்வதை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் புதிய வகை கொரோனா பரவ அதிக வாய்ப்புள்ள அனைத்து நிகழ்வுகளையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்றும் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் வலியுறுத்தி உள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து