தேசிய செய்திகள்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் - அதிர்ச்சி சம்பவம்

பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையின் ஷம்பார் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சிறுமியின் குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர், சிறுமி 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சிறுமியிடன் விசாரித்துள்ளனர்.

அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் (வயது 59) சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. மேலும், இதுகுறித்து யாரிடமாகவது கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் அந்த நபர் மிரட்டியுள்ளார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.