தேசிய செய்திகள்

ஓய்வு பெற்ற என்ஜினீயருக்கு 6 ஆண்டு சிறை; ரூ.2½ கோடி அபராதம்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஓய்வு பெற்ற என்ஜினீயருக்கு 6 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2½ கோடி அபராதமும் விதித்து மங்களூரு கோர்ட்டு தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

மங்களூரு;

சொத்து குவிப்பு

யாதகிரி மாவட்ட பஞ்சாயத்துராஜ்துறையில் நீர்ப்பாசனத்துறை என்ஜினீயராக பணியாற்றியவர் ராஜகோபால். இவர், கடந்த 2016-ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

இதற்கிடையே கடந்த 2010-ம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக லோக் அயுக்தா போலீசாரால், ராஜகோபால் கைதாகி மங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் அப்போது அவரிடமிருந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கின் குற்றப்பத்திரிகை மங்களூரு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

ரூ.2 கோடி அபராதம்

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரணை நடத்தி முடித்து நீதிபதி ஜகாதி தீர்ப்பு கூறினார்.

அதில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது நிரூபணமானதால் ராஜகோபாலுக்கு 6 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.

அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது