புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவை கடந்த வாரம் முழுமையாக முடங்கியது. இந்த வாரத்தில் ஓரிரு நாட்கள் சிறு சிறு பிரச்சினைகளுக்கு மத்தியில் பட்ஜெட் விவாதம் நடத்தி முடிக்கப்பட்டது.
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வந்ததால் தினந்தோறும் அவை முடங்கியது. பட்ஜெட் மீதான விவாத்தில் நேற்று முன் தினம் பேசிய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். ராகுலை எம்.பி. பதவியில் இருந்து நீக்கம் செய்வதற்காக நோட்டீசை பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே வழங்கி இருந்தார். ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து நீக்குவது மட்டுமைன்றி, வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட முடியாதபடி ராகுல் காந்திக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
இது ஏற்கப்பட்டு தீர்மானம் கொண்டு வரப்படுமா? என கேள்வி எழுந்தது. ராகுல் காந்திக்கு எதிராக ஒரு தீர்மானத்தை கொண்டு வரம் திட்டத்தை மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை கிரண் ரிஜ்ஜு கூறியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
இந்த விவகாரத்தை அவையின் சிறப்புரிமை குழு நெறிமுறை குழுவிற்கு அனுப்புவதா? அல்லது நேரடியாக மக்களவைக்கு கொண்டு வருவதா என்பது குறித்து சபாநாயகரிடம் ஆலோசிக்கப்படும். இது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானத்தை அவைக்கு மத்திய அரசு கொண்டு வராது அதில் கிடப்பில் போடப்பட்டது என தெரிவித்தார்.