தேசிய செய்திகள்

கோழைகளால் கீழ்படிய செய்ய முடியாது ‘ரைசிங் காஷ்மீர்’ முதல் பக்கத்தில் பத்திரிக்கையாளருக்கு அஞ்சலி

கோழைகளால் கீழ்படிய செய்ய முடியாது என ‘ரைசிங் காஷ்மீர்’ முதல் பக்கத்தில் பத்திரிக்கையாளருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளது. #ShujaatBhukhari #RisingKashmir

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரில் இருந்து வெளியாகும் ரைசிங் காஷ்மீர் பத்திரிக்கையின் தலைமை பத்திரிக்கை ஆசிரியர் ஷுஜாத் புகாரி நேற்று பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். பத்திரிக்கையாளர் கொல்லப்பட்டதற்கு அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். ரைசிங் காஷ்மீர் பத்திரிக்கையின் முதல் பக்கத்தில் ஷுஜாத் புகாரிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு உள்ளது.

பத்திரிக்கை வெளியிட்டு உள்ள அஞ்சலி செய்தியில், நீங்கள் எங்களை திடீரென விட்டுச் சென்றுள்ளீர்கள், ஆனால் நீங்கள் எப்போதும் உங்களுடைய தொழில் பக்தி மற்றும் முன்மாதிரியான தைரியம் ஆகியவற்றுடன் எங்களுக்கு எப்போதுமே வழிகாட்டியாக இருந்து வழிநடத்துவீர்கள். எங்களைவிட்டு உங்களை பறித்துக்கொண்ட கோழைகளால் நம்மை கீழ்படிய செய்ய முடியாது. கடினமான நிலையை எதிர்க்கொள்ள வேண்டியது இருந்தாலும், உண்மையை சொல்ல வேண்டும் என்பதில் உங்களுடைய கொள்கையை நாங்கள் கொண்டிருப்போம், உங்களுடைய ஆத்மா சாந்தியடையட்டும், என குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்