தேசிய செய்திகள்

39 ஆயிரம் வாக்குகள் முன்னிலை - வெற்றியை நெருங்கும் ஜடேஜா மனைவி ரிவபா...!

ஜாம்நகர் வடக்கு தொகுதியில் ரிவபா போட்டியிட்டார்.

காந்திநகர்,

குஜராத் மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில், 150-க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள பாஜக ஆட்சியை தக்க வைக்க உள்ளது.

இதனிடையே, இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவபா தேர்தலில் போட்டியிட்டார். பாஜக வேட்பாளராக களமிறங்கிய ரிவபா ஜாம்நகர் வடக்கு தொகுதியில் களமிறங்கினார்.

இந்நிலையில், ஜாம்நகர் வடக்கு தொகுதியில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது. இதில் ஆம் ஆத்மி வேட்பாளருக்கும் ஜடேஜா மனைவி ரிவவாவுக்கும் இடையே தொடக்கத்தில் இழுபறி நீடித்து வந்தது.

பின்னர் அடுத்தடுத்த சுற்றுகளில் ரிவபா அதிக வாக்குகளை பெற்று முன்னிலை பெற்றார். 13 சுற்றுகள் முடிவில் ரிவபா 67 ஆயிரத்து 54 வாக்குகளை பெற்றுள்ளார். அவர் பிற கட்சி வேட்பாளர்களை விட 39 ஆயிரத்து 268 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். இன்னும் 4 சுற்றுகளே எஞ்சியுள்ள நிலையில் பாஜக வேட்பாளரான ஜடேஜா மனைவி ரிவபாவின் வெற்றி உறுதியாகியுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு