பீகார்
கட்சியின் பேரவை உறுப்பினரான ராமாநுஜ் பிரசாத் இவ்வாறு கருத்து தெரிவித்திருந்த நிலையில், ஐக்கிய ஜனதாதளத்தின் மாநில செய்தித்தொடர்பாளர் சஞ்சய் சிங், இக்குற்றச்சாட்டு அடிப்படையற்றது. அவரது கட்சி அரசில் அங்கம் வகிக்கும் போது எப்படி அவரது தொலைபேசியை ஒட்டுக்கேட்க முடியும்? என்று கேள்வி எழுப்பினார். மேலும் ரா.ஜ.த தலைவர்கள் சிலர் கூட்டணியில் பிரச்சினையை உருவாக்க முயல்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
முகம்மது ஷஹாபுதினிடம் லாலு பேசும் உரையாடல் நேற்று தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. ஷஹாபுதின் மீது 40 குற்ற வழக்குகள் உள்ளன. தற்போது அவர் சிறையில் உள்ளார். ராமாநுஜ் பிரசாத் இப்படி பெரிய தலைவர்களின் தொலைபேசி உரையாடலை பதிவு செய்வதை இந்த உரையாடல் வெளியீடு நிரூபிக்கிறது, என்றார்.
இது பற்றி உயர் மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதே கருத்தை பாஜக தலைவர் நந்த் கிஷோர் யாதவ்வும் முதல்வர் நிதிஷ் இந்த உரையாடல் பதிவை யார் செய்தார்கள் என்று தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அது அவரது பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த உரையாடல் சிறையில் இருக்கும் குற்றவாளிகள் மாநில அரசை வழிநடத்துகிறார்கள் என்பதையே இந்த உரையாடல் தெரிவிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். லாலு - ஷஹாபுதீன் உரையாடல் சென்ற ஆண்டு ஏப்ரலில் நடந்தது என்றும் ஷஹாபுதீன் அப்போத் சிவான் மாவட்ட எஸ்.பியை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததையும் உட்கொண்டிருந்தது. ஷஹாபுதீனுடன் பேசி விட்டு உடனடியாக லாலு எஸ்.பியுடன் பேச முற்படுவதையும் ஒலிப்பதிவு வெளிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.