நெல்லூர்,
ஆந்திர பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டத்தில் துவ்வுரு கிராமத்தில் தங்களுடைய பணியிடத்திற்கு செல்வதற்காக தொழிலாளர்கள் சிலர் வாகனம் ஒன்றில் கிளம்ப தயாராக இருந்தனர்.
இந்நிலையில், பால் வேன் ஒன்று திடீரென அந்த வாகனம் மீது பின்புறத்தில் இருந்து மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். ஒருவர் நெல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.
இதுதவிர பால் வேன் ஓட்டுனர் மற்றும் 3 தொழிலாளர்கள் பலத்த காயமடைந்து நெல்லூருக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.