தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் சாலை விபத்து: பலி எண்ணிக்கை 13ஆக உயர்வு

மராட்டியத்தில் பஸ் மீது லாரி மோதிய விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 13ஆக உயர்ந்தது.

தினத்தந்தி


மும்பை,

மராட்டிய மாநிலம் நந்தூர்பர் மாவட்டம் சகாதா நகரில் இருந்து அவுரங்காபாத்துக்கு அரசு பஸ் ஒன்று நேற்றுமுன்தினம் இரவு புறப்பட்டு சென்றது. துலே மாவட்டம் நிம்குல் கிராமம் அருகே சென்றபோது, எதிரே வந்த கன்டெய்னர் லாரி பஸ் மீது மோதியது.

இந்த விபத்தில் 2 வாகனங்களின் டிரைவர்கள் மற்றும் 9 பயணிகள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்ததால் பலியானோர் எண்ணிக்கை 13ஆக உயர்ந்தது. பலியானவர்களில் 2 பெண்கள், 2 குழந்தைகள் அடங்குவர். படுகாயம் அடைந்த 15 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு