தேசிய செய்திகள்

ரூ.3 லட்சத்துடன் ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கிச்சென்ற கொள்ளையர்கள்

நாக்பூர் மாவட்டத்தில், ரூ.3 லட்சத்துடன் ஏ.டி.எம். எந்திரத்தை கொள்ளையர்கள் தூக்கிச்சென்றனர்.

நாக்பூர்,

மராட்டியத்தின் நாக்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட படான்சாங்கி கிராமத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்துக்கு நேற்று முன்தினம் அதிகாலையில் வந்த மர்ம நபர்கள் சிலர், முதலில் வங்கியுடனான அந்த ஏ.டி.எம். எந்திரத்தின் இணைப்பை துண்டித்தனர்.

பின்னர் அந்த எந்திரத்தையே அங்கிருந்து பெயர்த்து எடுத்துச்சென்றனர். அத்துடன் ஏ.டி.எம். மையத்தில் வைக்கப்பட்டிருந்த வீடியோ கேமரா மற்றும் கண்காணிப்பு கேமராவையும் திருடிச்சென்றனர். அந்த எந்திரத்தில் சுமார் ரூ.3 லட்சம் இருந்ததாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏ.டி.எம். எந்திரத்தை எடுத்துச்செல்ல கொள்ளையர்கள் பயன்படுத்திய வாகனமும் கடந்த 2-ந்தேதி நாக்பூர் அருகே திருடப்பட்டதுதான் என போலீசார் தெரிவித்து உள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தில் அரியானாவை சேர்ந்த கொள்ளையர்கள் ஈடுபட்டிருக்கலாம் என அவர்கள் சந்தேகம் வெளியிட்டு உள்ளனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை