தேசிய செய்திகள்

காஷ்மீரில் சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் 4 ஏ.கே. ரக துப்பாக்கிகள் கொள்ளை; 4 போலீசார் பணி நீக்கம்

காஷ்மீரில் சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் 4 ஏ.கே. ரக துப்பாக்கிகளை கொள்ளையடித்த விவகாரத்தில் 4 காவல் துறை அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஜவகர் நகர் பகுதியில் வசித்து வருபவர் முஜாபர் பர்ரே. காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற மேலவை உறுப்பினராக உள்ளார். இவரது இல்லத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறை அதிகாரிகளின் 4 ஏ.கே. ரக துப்பாக்கிகளை சந்தேகத்திற்குரிய தீவிரவாதிகள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து ஸ்ரீநகரில் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். இந்த விவகாரத்தில் பர்ரேவின் வீட்டில் தனி பாதுகாப்பு அதிகாரிகளாக பணியாற்றிய 4 காவல் துறை அதிகாரிகள் கடமையில் இருந்து தவறியதற்காக மற்றும் உரிய அனுமதியின்றி பணியின்பொழுது இல்லாமல் போனதற்காக பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை