தேசிய செய்திகள்

லண்டன் சொத்து வழக்கில் ராபர்ட் வதேராவின் நண்பர் கைது அமலாக்கத்துறை நடவடிக்கை

லண்டன் சொத்து வழக்கில் ராபர்ட் வதேராவின் நண்பர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

லண்டனில் முறைகேடாக சொத்துகள் வாங்கியதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா, தலைமறைவான ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக, வெளிநாட்டு இந்திய தொழிலதிபரும், ராபர்ட் வதேராவின் நண்பருமான சி.சி.தம்பி என்பவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.

சஞ்சய் பண்டாரி நிறுவனம் விற்ற லண்டன் வீட்டை சி.சி.தம்பியின் நிறுவனம் வாங்கியதாகவும், பிறகு அந்த வீட்டை ராபர்ட் வதேரா வாங்கியதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. சோனியா காந்தியின் உதவியாளர் மூலமாக தம்பிக்கு ராபர்ட் வதேராவின் அறிமுகம் கிடைத்ததாகவும் கூறியுள்ளது. இதை வதேரா மறுத்துள்ளார். தம்பி கைது மூலம் இவ்வழக்கின் மர்மங்கள் அகலும் என்று அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து