தேசிய செய்திகள்

தினமும் காலையில் கூவி தூக்கத்திற்கு இடையூறு; சேவல் மீது போலீசில் பெண் புகார்

தினமும் காலையில் கூவி தூங்குவதற்கு இடையூறாக இருந்த சேவல் மற்றும் அதன் உரிமையாளர் மீது பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

தினத்தந்தி

புனே,

மகாராஷ்டிராவின் புனே நகரில் சோம்வார் பேட்டை பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்து உள்ளார். இதில், தினமும் காலையில் எனது வீட்டின் முன் சேவல் ஒன்று வந்து நின்று கூவி எனது தூக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்துகிறது என தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி போலீசார் கூறும்பொழுது, பெண்ணின் புகாரை பெற்று கொண்டோம். இதனை விசாரித்தபொழுது, அந்த பெண் அவரது சகோதரியின் வீட்டில் தங்கியுள்ளார். சில நாட்களுக்கு முன் அங்கு வந்த அந்த பெண் புகார் கொடுத்து விட்டு சென்று விட்டது தெரிய வந்துள்ளது என கூறினர்.

இதனை தொடர்ந்து பெண்ணின் சகோதரியை தொடர்பு கொண்டு போலீசார் விசாரித்தனர். ஆனால் அவர், எனது சகோதரி சற்று மனநிலை பாதித்தவள் என கூறி விட்டார். இதனால் இந்த விவகாரத்தில் முறைப்படி புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று காவல் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்