தேசிய செய்திகள்

ரோட்டோமேக் பேனா நிறுவனத்தின் ரூ.177 கோடி சொத்துகள் முடக்கம் - அமலாக்கத்துறை நடவடிக்கை

ரோட்டோமேக் பேனா நிறுவனத்தின் ரூ.177 கோடி சொத்துகள் முடக்கம் செய்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை தலைமையிடமாக கொண்ட ரோட்டோமேக் பேனா நிறுவனம், பேங்க் ஆப் பரோடா வங்கியில் பெற்ற ரூ.2 ஆயிரத்து 919 கோடி கடனை திருப்பிச் செலுத்தவில்லை. இந்த கடன்தொகை, வட்டியுடன் சேர்த்து ரூ.3 ஆயிரத்து 695 கோடியாக உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக, வங்கி அளித்த புகாரின்பேரில், சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

அதன் அடிப்படையில், ரோட்டோமேக் நிறுவனம் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது. பேனா நிறுவன அதிபர் விக்ரம் கோத்தாரி, அவருடைய மனைவி சாதனா கோத்தாரி, மகன் ராகுல் கோத்தாரி மற்றும் வங்கி அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், ரோட்டோமேக் நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர்களுக்கு சொந்தமான ரூ.177 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை நேற்று முடக்கியது. இந்த சொத்துகள், கான்பூர், மும்பை, உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூன், குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத், காந்திநகர் ஆகிய நகரங்களில் அமைந்துள்ளன.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து