தேசிய செய்திகள்

நிலவில் வட்டமிடும் ரோவர்... தாய் பாசத்துடன் பார்க்கும் லேண்டர் - வீடியோ வெளியிட்ட இஸ்ரோ..!

நிலவில் சந்திராயன்-3 விண்கலத்தின் ரோவர் பாதுகாப்பாக உலா வரும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

தினத்தந்தி

பெங்களூரு,

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டு உள்ள சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து சென்றது. அதில் இருந்து வெளியேறிய பிரக்யான் ரோவர் நிலவை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. நிலவில் சல்பர் உள்ளிட்டவை இருப்பதை கண்டறிந்து பிரக்யான் ரோவர் உறுதி செய்துள்ளது.

இந்த நிலையில் நிலவில் சந்திராயன் 3 விண்கலத்தின் ரோவர் பாதுகாப்பாக உலா வரும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. ரோவரை, விக்ரம் லேண்டர் குழந்தையை போல் கண்காணித்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள பதிவில், "பாதுகாப்பான பாதையை தேடி ரோவர் சுழற்றப்பட்டது. இந்த சுழற்சி லேண்டர் இமேஜர் கேமரா மூலம் படம்பிடிக்கப்பட்டது. சந்தா மாமாவின் முற்றத்தில் ஒரு குழந்தை விளையாட்டுத்தனமாக உல்லாசமாக இருப்பதை, தாய் பாசத்துடன் பார்ப்பது போன்ற உணர்வு. இல்லையா?" என்று தெரிவித்து உள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு