புதுடெல்லி,
நடப்பு நிதியாண்டில், கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் அக்டோபர் 25-ந் தேதிவரை, வருமான வரி செலுத்துவோருக்கு ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 952 கோடியை திரும்ப வழங்கி (ரீபண்ட்) இருப்பதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறியுள்ளது.
இதில், தனிநபர் வரி செலுத்தும் 76 லட்சத்து 21 ஆயிரத்து 956 பேருக்கு ரூ.27 ஆயிரத்து 965 கோடியும், கார்ப்பரேட் வரி செலுத்தும் 1 லட்சத்து 70 ஆயிரத்து 424 பேருக்கு ரூ.74 ஆயிரத்து 987 கோடியும் திரும்ப வழங்கப்பட்டுள்ளது.