தேசிய செய்திகள்

கர்நாடகாவில் ரூ.1,069 கோடி நலத்திட்ட பணிகள்; துவக்கி வைத்த கார்கே

65 சதவீத இந்திய விவசாயிகள் வேளாண்மையை சார்ந்தே உள்ளனர் என கார்கே கூறினார்.

கலபுரகி

கர்நாடகாவின் கலபுரகி மாவட்டத்தில் சித்தப்பூர் நகரில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவரான கார்கே இன்று ரூ.1,069 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டங்களை துவக்கியும் வைத்துள்ளார்.

இதன்பின்னர் திரளாக கூடியிருந்த கூட்டத்தினரின் முன் உரையாற்றிய அவர், 3 சதவீத இந்தியர்களே அமெரிக்காவை சார்ந்துள்ளனர். 65 சதவீத இந்திய விவசாயிகள் வேளாண்மையை சார்ந்தே உள்ளனர் என கூறினார்.

ரஷியாவிடம் எண்ணெய் வாங்கினால் வரி விதிப்பேன் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இந்தியாவுக்கு எதிராக கூறுகிறார். டிரம்ப்பிடம் ஒவ்வொரு நாளும் நான் பேசுகிறேன் என மோடி கூறுகிறார். வரி விதிப்பது பற்றியா அவரிடம் நீங்கள் பேசி கொண்டிருக்கிறீர்கள்? என கார்கே கேட்டுள்ளார்.