தேசிய செய்திகள்

வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது மோடிக்கு கிடைத்த ரூ.12 லட்சம் பரிசு பொருட்கள்

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2017–ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 20 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

பிரதமர் மோடிக்கு ரூ.12 லட்சத்து 57 ஆயிரம் மதிப்புள்ள பரிசு பொருட்கள் கிடைத்து இருப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சக இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

இவற்றில், ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள மோன்ட்பிளாங்க் கைக்கெடிகாரம், ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி தகடு, ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள மோன்ட்பிளாங்க் பேனா செட், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மசூதி மாதிரி வடிவம், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள வாள் ஆகியவை அடங்கும்.

மேலும், கடவுள் சிலைகள், ஓவியங்கள், புத்தகங்கள், புகைப்படங்கள், புல்லட் ரெயில் மாதிரி, படிக மற்றும் வெள்ளி கிண்ணம், பசுபதிநாத் மற்றும் முக்திநாத் கோவில்களின் மாதிரி, சால்வைகள், கம்பளம், பவுண்டன் பேனா ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.

வெளிநாட்டுக்கு செல்லும்போது கிடைக்கும் ரூ.5 ஆயிரத்துக்கு மேல் மதிப்புடைய பரிசுப் பொருட்களை மத்திய வெளியுறவு அமைச்சக கருவூலத்தில் சேர்க்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அதன்படி, அத்தகைய பரிசுப் பொருட்களை பிரதமர் மோடி கருவூலத்தில் சேர்த்து விட்டதாக இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு